நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர்ப்பகுதியில் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே தனியார் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் மாதம் அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் கழுகுமலை செல்லும் சாலையை மறித்து போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், இங்குக் கோபுரம் அமைக்கும் பணி கிடப்பில் இருந்ததுள்ளது. ஆனால், நேற்று முன்தினம் இரவோடு இரவாகக் அலைபேசி கோபுரம் உயரமாகக் கட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த கைப்பேசி கோபுரம் அமையக் கூடாது என்று கூறி சீனிவாசன் எதிரே உள்ள கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.