திருநெல்வேலி: காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மனைவியின் பெயர் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமிக்கும் வேறு ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக சுடலையாண்டி தன் மனைவி மீது குற்றஞ்சாட்டி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜன.10) மதியம் வீட்டிலிருந்த ஜெயலட்சுமியிடம் சுடலையாண்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுடலையாண்டி ஜெயலட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுடலையாண்டியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஜன. 31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு