தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ”இந்த தேர்தல் மூலமாக தமிழகத்தில் அதிகார மாற்றம் ஏற்படும். அம்மாற்றம் தமிழகத்தில் வளர்ச்சியை கொண்டு வரும். மாநில உரிமையை மீட்டு, டெல்லியின் அதிகாரத்தை தடுப்பது தான் எங்களின் நோக்கம். எங்கள் கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். ஆளுங்கட்சியினர் பணம் கொடுத்தால் அதை ஆணையம் பிடிப்பதில்லை. ஆனாலும் மக்கள் சக்தி பணநாயகத்தை வென்று காட்டும்.
கொடநாடு கொலை மர்மங்கள் என்ன ஆனது? - கே.எஸ்.அழகிரி
நெல்லை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மர்மங்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள் திமுக கூட்டணி குறித்து விமர்சிப்பதா என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.
alagiri
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்கிற முதலமைச்சர், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த பல கொலைகள் குறித்த வழக்கு விசாரணை என்ன ஆனது? அங்கு திருடப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிக்கப்பட்டதா? இதற்கு முதலில் முதலமைச்சரும் அமித்ஷாவும் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள்