தாமிரபரணி ஆற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் ஓடும் நிலையில் நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் நடு ஆற்றில் உடல் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த தச்சநல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டனர். 40 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சடலத்தின் உடல், தலை உள்ளிட்ட ஆறு இடங்களில் வெட்டுக் காயம் இருந்ததைக் கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
தாமிரபரணி ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம்..! - Unknown body with 6 cutting wound found in thamirabharani river
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் ஆறு வெட்டு காயங்களுடன் ஆண் உடல் மீட்கபட்டதையடுத்து இவர் யார் என்பது குறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம்
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இறந்தது யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், ஆறு வெட்டுக் காயங்களுடன் உடல் மீட்கப்பட்டுள்ளதால் இவரைக் கொலைசெய்தவர் யார், எந்த இடத்தில் ஆற்றில் வீசப்பட்டார் என்பது குறித்தும் தச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.