தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் ஒரே நாளில் 2 காவலர்கள் டிஸ்மிஸ் - அதிர்ந்த காவல் துறையினர்! - இரண்டு காவலர்கள் டிஸ்மிஸ்

நெல்லையில் அரசு பணம் பத்தாயிரம் ரூபாயை கையாடல் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர் ஆகியோரை பணிநீக்கம் செய்து எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் ஒரே நாளில் இரண்டு காவலர்கள் டிஸ்மிஸ்
நெல்லையில் ஒரே நாளில் இரண்டு காவலர்கள் டிஸ்மிஸ்

By

Published : Jun 30, 2022, 10:39 PM IST

திருநெல்வேலி:கூடங்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர், ஆனந்தன். இவர் ஏற்கெனவே பழவூர் காவல் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்தபோது காவல் நிலைய பராமரிப்பு செலவுக்காக அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாயைக் கணக்கில் காட்டாமல் கையாடல் செய்தது தணிக்கையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடந்து வந்த நிலையில் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை நிரந்தரப் பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல் அதே பழவூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2001ஆம் ஆண்டு நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார். எனவே, அவரையும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட காவல் துறையில் அடுத்தடுத்து ஒரே நாளில் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:3 ஆண்டுகளுக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details