திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். (பேரூராட்சி தூய்மைப் பணியாளர்) இவருடைய மூத்த மகன் மணிகண்டன் லோடு ஆட்டோவில் ஊர் ஊராக சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 1ஆம் தேதி நெல்லைக்கு வெங்காயம் விற்க வந்த அவருக்கு உதவியாக அவரின் 13 வயது தம்பியும் சென்றிருந்தார். இவர்கள் சுத்தமல்லி பகுதியில் தங்கி இருந்து வெங்காயம் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஜூன் 15) அவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால் அவரது தந்தை நாகராஜ் மற்றும் உறவினர்கள் சுத்தமல்லி பகுதிக்கு வந்து தேடியுள்ளனர்.
அப்போது திருப்பணிகரிசல்குளம் குளக்கரையில் அவர்களது லோடு ஆட்டோ மட்டும் நின்று கொண்டிருந்ததனை கண்டு
பிடித்தனர். ஆனால், அவர்கள் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து நாகராஜ் சுத்தமல்லி காவல் துறையினரிடம் புகார் செய்தார். பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான அண்ணன், தம்பியை தேடினர்.