இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக நெல்லை மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் இன்று இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை ஆயுதப்படை உதவி ஆணையர் ஆனந்தராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி - trinelveli
நெல்லை: தலைக்கவசம் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகர போக்குவரத்துக் காவல் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணி
இதில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போக்குவரத்துக் காவல் துறையினர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணியானது பாளை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி, பாளை சந்தை, சமாதானபுரம் என மாநகரின் முக்கியப் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைந்தது.