தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாகனத்திலிருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த போக்குவரத்துக் காவலர்கள் - சாலை விபத்து

திருநெல்வேலி: வாகனத்திலிருந்து கீழே விழ இருந்த பச்சிளம் குழந்தையை மின்னல் வேகத்தில் சென்று போக்குவரத்து காவலர்கள் காப்பாற்றியுள்ளனர்.

traffic police who rescued the child from the accident
traffic police who rescued the child from the accident

By

Published : Sep 16, 2020, 8:04 AM IST

அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் சந்திப்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களும் ஒரு பச்சிளம் குழந்தையும் வந்து கொண்டிருந்தனர். திடீரென ஒருவர் குறுக்கே சென்றதால், அதனை ஓட்டி வந்த பெண் பிரேக் போட்டுள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்த பச்சிளம் குழந்தை உள்பட மூன்று பேரும் நிலைதடுமாறி தவறி, கீழே விழ முயன்றனர்.

இதனைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள் ஓடி வந்து அந்த பச்சிளம் குழந்தை கீழே விழுவதற்குள், தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளனர். குழந்தையைக் காப்பாற்றிய காவலர்களை பொதுமக்கள் பாராட்டிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details