நெல்லை:திருநெல்வேலி மாவட்டத்தில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பள்ளியில் பயின்றுவரும் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் சஞ்சய், பிரகாஷ், அபுபக்கர், அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.