திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரி வளாகத்திற்குள் மதுவை பகிரும் மாணவிகள்: வைரலாகி வரும் வீடியோ! - தெற்கு கள்ளிகுளத்தில் தட்சண மாற நாடார் சங்க கல்லூரி
திருநெல்வேலி: வள்ளியூர் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகள் மது குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் சிலர் பிரிவு உபசார விழா என்ற போர்வையில் வகுப்பில் மது குடித்து விட்டு கும்மாளமிட்டு நடனமாடி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கல்லூரியிலேயே மாணவிகள் மது பாட்டிலை கையில் வைத்து குடித்து சமூக சீரழிவை ஏற்படுத்தி இருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.