தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்...மனோன்மணியம் பல்கலைகழக புதிய துணைவேந்தர் - பேராசிரியர் முனைவர் சந்திரசேகர்

தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மனோன்மணியம் பல்கலைகழகபுதிய துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 23, 2022, 11:36 AM IST

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் முனைவர் சந்திரசேகர் இன்று பதவி ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பல்கலைக்கழகத்தில் 14 ஆண்டுகள் புவிசார் தொழில்நுட்பத் துறை தலைவராக பணியாற்றியுள்ளேன். தற்போது இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மீண்டும் பணியாற்ற வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்கலைக்கழகத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் பேசும் அளவிற்கு இந்த பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்தப்படும். பாடத்திட்டங்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல் கொண்டு வரப்படும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

மேலும், ஆராய்ச்சி மற்றும் தாய்மொழி வழி கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆராய்ச்சி என்பது ஆய்வகத்தோடு மட்டும் நின்று விடாமல் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கொண்டு செல்ல துறை பேராசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்படுவேன்.

80 சதவீதம் நேரடி கல்வி முறையும், 20 சதவீதம் இணைய வழி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும். இணைய வழி கல்விக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்படும். நமது பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவில் தர வரிசையில் 50 இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையாக இருக்கும், பல்கலைக்கழக நிர்வாகம் எந்த ஒளிவு மறைவுக்கும் இடம் இல்லாமல் வெளிப்படையாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய இயற்பியலாளர் அன்னா மாணிக்கு டூடல் வெளியிட்ட கூகுள்

ABOUT THE AUTHOR

...view details