Tirunelveli Students Death:திருநெல்வேலி டவுண் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் டிசம்பர் 17ஆம் தேதி அன்று உயிரிழந்தனர்
மாணவர்களின் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் ஞான செல்வி, தாளாளர் சாமுவேல் செல்வகுமார், கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.