தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவிக்கு பாலியல் தொல்லை; திசையன்விளை தலைமை ஆசிரியர் கைது! - மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கேரளாவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாணவிக்கு பாலியல் தொந்தரவு, Nellai student sexually harassed, tirunelveli hm arrested who sexually harassed student, தலைமையாசிரியர் கேரளாவில் கைது
நெல்லை மாணவிக்கு பாலியல் தொந்தரவு

By

Published : Jan 7, 2022, 1:34 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் திசையன்விளை காவலர்கள் தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகமும் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது.

கடந்த ஒரு வாரமாக, அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிய நிலையில், அவர் கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை அடுத்து, தனிப்படை காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை திசையன்விளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை பாதுகாப்புடன் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல்: மலைவாழ் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details