தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை தக்கவைத்தது திமுக - திமுக வேட்பாளர் ஞானதிரவியம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஞானதிரவியம், தனக்கு பின்வந்த அதிமுகவின் பால் மனோஜ் பாண்டியனை விட ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 519 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

திமுக வேட்பாளர் ஞானதிரவியம்

By

Published : May 23, 2019, 7:32 PM IST

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஞானதிரவியம் ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 589 வாக்குகள் பெற்று, தனக்கு பின்வந்த அதிமுகவின் பால் மனோஜ் பாண்டியனை (3,36,070 வாக்குகள்) விட ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 519‬ வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இவர் அன்னை குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனர் ஆவார். ஞானதிரவியம் திமுக கட்சியில், 2002 முதல் வள்ளியூர் ஒன்றிய கழக செயலாளராகவும், 2014 முதல் நெல்லை கிழக்கு மாவட்ட கழக பொருளாளராகவும் பதவி வகித்துவந்தார்.

ABOUT THE AUTHOR

...view details