தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் பிப்.28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் ஆட்சியர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், காவல்துறையினர் முதல்கட்ட தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று (மார்ச்.5) ஆலோசனை நடத்தினார்.