தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் - நெல்லை மாமன்றக் கூட்டம்

நெல்லை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக ரூ.34 லட்சம் மதிப்பில் 3 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 24, 2022, 7:27 PM IST

நெல்லைமாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் இன்று (ஆக.24) நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில் துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் நான்கு மண்டல துணை ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மேயர் சரவணன், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நெல்லை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் ரூ.34 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

ரூ.42 கோடியில் புதிய சாலைகள்: பாதாளச்சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளில் ரூ.42 கோடியில் புதிய சாலைகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித்திட்டம்

இருப்பினும், பல்வேறு இடங்களில் திட்டப்பணிகள் முடிவடையாததால் பொதுமக்களின் அவசரப்போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு 18 இடங்களில் மாற்று சாலைகள் போடப்படும். பருவ மழை நேரங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, நெல்லையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டெங்கு இல்லாத மாநகராட்சியாக உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்’ என்று பேசினார்

இதையும் படிங்க: திருச்செந்தூர் ஆவணித்திருவிழா சண்முகருக்கு பச்சை சார்த்தி வீதி உலா... 26ஆம் தேதி தேரோட்டம்

ABOUT THE AUTHOR

...view details