தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டாவது நாளாக அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி ... - Nellai District Junction Railway Station

நெல்லையில் இரண்டாவது நாளாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 13, 2022, 11:47 AM IST

திருநெல்வேலி: இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி நாடு முழுவதும் நேற்று(செப்.13) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் நேற்று(செப்.13) ஒரு நாள் மட்டும் தேசியக்கொடி அரக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில், நெல்லை மாவட்ட சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்தது.

அதாவது, மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்காக நேற்று(செப்.13) நெல்லை ரயில் நிலையத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிகழ்வை சரிவர கண்காணிக்காத ரயில்வே அதிகாரிகள் ஒரு நாள் துக்க அனுசரிப்பு முடிந்த நிலையில், தேசிய கொடியை மேலே உயர்த்தாமல் இன்று இரண்டாவது நாளாக அரை கம்பத்தில் பறக்க விட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்ததால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பு நிலவியது

பொதுவாக, இது போன்று முக்கிய தலைவர்கள் உயிரிழந்தால் தான் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். எனவே, நெல்லை ரயில் நிலையத்தில் 2வது நாளாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பரத்தனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்த தற்போது நெல்லை ரயில் நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக தேசிய கொடியை சரி செய்து மேலே உயர்த்தி வழக்கம்போல் பறக்க விட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details