திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது புதுத்தெரு, இறடிகால் பகுதிகள். இங்கே சுமார் 250க்கும் அதிமான குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்தப் பகுதியிலுள்ளவர்கள் இறந்தால் அவர்களை அடக்கம செய்ய அருகிலுள்ள இடுகாட்டிற்கு, புலியூர்நத்தம் வாய்க்காலைத் தாண்டிதான் எடுத்துச் செல்ல வேண்டும். மழைக் காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வரும் நேரங்களிலும் இறந்தவர்களின் உடல்களைக் கழுத்தளவு தண்ணீரில் நீந்திய படிதான் எடுத்துச் செல்லும் அவலத்திற்கு இப்பகுதி மக்கள் ஆளாக நேரிடும்.
தங்களின் இடுகாட்டிற்கு வாய்க்காலைக் கடந்து செல்ல மேல் நிலைப் பாலம் அமைத்து தராத அரசு நிர்வாகத்தை கண்டித்து, கடந்த நான்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாத இப்பகுதி மக்கள் அறிவித்தனர். தகவல் அறிந்து வந்த அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியாளித்ததைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டனர். மக்களின் இடுகாடு பிரச்னை இன்னும் தீரவில்லை.