தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருநெல்வேலியில் கைதான கனிமவளத் துறை அலுவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

ஆற்று மணல் கடத்தல் வழக்கில் சிபிசிஐடி காவலர்கள், ஊட்டி கனிமவளத் துறை உதவி இயக்குநர் சபியாவை நேற்று (ஏப். 10) கைது செய்தனர். இதையடுத்து, அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டார்.

திருநெல்வேலியில் கைதான கனிமவளத் துறை அலுவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி
திருநெல்வேலியில் கைதான கனிமவளத் துறை அலுவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

By

Published : Apr 11, 2022, 10:01 AM IST

Updated : Apr 11, 2022, 10:33 AM IST

திருநெல்வேலி:2019ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் பொட்டல் பகுதியில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மலங்கரா கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை கோட்டையத்தை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அரசு ஒப்புதலுடன் குவாரி அமைத்து நடத்தி வந்தார்.

அதில், எம்-சாண்ட் மணல் தயாரித்து கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வந்தார். இதனிடையே 2020ஆம் ஆண்டு, எம்-சாண்ட் என்னும் பெயரில் ஆற்று மணலை கேரளாவுக்கு கடத்தியதாக ஜார்ஜ் மீது கல்லிடைக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலியில் கைதான கனிமவளத் துறை அலுவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி: அதுதொடர்பான வழக்கில், சட்டத்துக்கு புறம்பாக 27 ஆயிரத்து 776 கியூபிக் மீட்டர் மணலை கொள்ளை அடித்ததாகக் கூறி, சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் குவாரிக்கு 9 கோடியே 56 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். அத்துடன் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வழக்கு, 2021ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், லங்கரா கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த குவாரி நில உரிமையாளர்கள் ஆறு பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களும் பிப்ரவரி 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கிற்கும் திருநெல்வேலியின் அப்போதைய கனிமவளத் துறை உதவி இயக்குநர் சபியாவுக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதனிடையே சபியா ஊட்டிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஏப். 10) திருநெல்வேலியில் சிபிசிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கனிம வளத்துறை அலுவலரான சபியாவை மருத்துவ பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு உடலில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தக்கோரி விவசாயிகள் போராட்டம்'

Last Updated : Apr 11, 2022, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details