தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ககன்யான் திட்டம்: இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி - மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம்

ககன்யான் விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் விகாஸ் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டம்: என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி
ககன்யான் திட்டம்: என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

By

Published : Jul 14, 2021, 10:44 PM IST

திருநெல்வேலி:வரும் 2022இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முன்னோடிதான் ககன்யான் திட்டம்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ககன்யான் விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் விகாஸ் இன்ஜின் சோதனை ஓட்டம் இன்று மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

240 விநாடிகள் நடைபெற்ற இந்த விகாஸ் இன்ஜினுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மூன்றாம்கட்ட மற்றும் இறுதிச் சோதனை இன்னும் ஒன்றரை மாத காலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’இந்தாண்டு டிசம்பரில் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்’ : பட்ஜெட்டில் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details