தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இன்று தங்கள் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு முயல் வேட்டைக்குச் சென்றனர்.
அந்த வழியில் உள்ள ஒரு தோட்டத்தில், பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயி ஒருவர் தனது நிலத்தில் மின்வேலி அமைத்துள்ளார். இதனை அறியாமல் வேட்டைக்குச் சென்ற செல்வகணபதி(22), விஜயன்(22) ஆகியோர் மின் வேலியில் கால் வைத்துள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.