தமிழ்நாடு

tamil nadu

தெலுங்கு வருடப்பிறப்பு: நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பூஜை

By

Published : Apr 2, 2022, 5:21 PM IST

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

telugu-new-year-special-pooja-at-nellaiyappar-temple-in-tirunelveli
telugu-new-year-special-pooja-at-nellaiyappar-temple-in-tirunelveli

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நாகம நாயக்கர், விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலை நாயக்கர் உள்ளிட்ட 7 தெலுங்கு மன்னர்களில் சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுக்கு இன்று தெலுங்கு வருடப்பிறப்பினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதன்படி தெலுங்கு மக்கள் சார்பில், மன்னர்களின் சிலைகளுக்கு புதிய வஸ்திரங்கள், பூ, தேங்காய், பழங்கள் படைக்கப்பட்டன. மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான தெலுங்கு மக்கள் கலந்துகொண்டனர். இறுதியாக கோயில் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் 50 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். இதனால் தமிழ்நாட்டிலும் தெலுங்கு வருடப்பிறப்பு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க:திருமலை நாயக்கர் விழா: தெலுங்கு பேசும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்காதது வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details