தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாமிரபரணி வெள்ளப்பெருக்கு! வீடுகளுக்குள் புகுந்த நீர்!

நெல்லை: தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளிப்பெருக்கால் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

flood
flood

By

Published : Jan 13, 2021, 11:16 AM IST

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்று பிற்பகல் முதல் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. கருப்பந்துறையில் உள்ள போக்குவரத்து பாலம் முழுவதும் மூழ்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மேலப்பாளையம் செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டன.

அதேபோல் வண்ணாரப்பேட்டையில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் விடிய விடிய தூக்கம் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகுகளில் மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். மாவட்டம் 188 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தாமிரபரணி வெள்ளப்பெருக்கு! வீடுகளுக்குள் புகுந்த நீர்!

தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் அணையின் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பாபநாசம் அணையிலிருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து 12,000 கன என மொத்தம் 20,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தே காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நெல்லையில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க:மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details