தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை... பல் மருத்துவர் சரண்... - நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

திருநெல்வேலியில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பல் மருத்துவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

By

Published : Apr 7, 2022, 1:27 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையின் உரிமையாளரும் பல் மருத்துவருமான சுகுமார் பயிற்சி பெற வந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சுகுமார் சம்பந்தப்பட்ட மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை மாணவி வீட்டில் கூறியதால், அவரது பெற்றோர் நேற்று (ஏப்ரல் 6) பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

அதனடிப்படையில் போலீசார் சுகுமார் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சுகுமார் மருத்துவமனையை இழுத்து மூடி விட்டு தலைமறைவானார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 7) பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை காவல்துறையினர் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கணவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மனைவி: காரணம்?

ABOUT THE AUTHOR

...view details