திருநெல்வேலி: அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளக்கால் புதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிகிறது. மேலும் பெல்ட்டால் அடித்து மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.