தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சங்கரன்கோவிலையும் மாவட்டமாக அறிவிக்கக் கோரி கடையடைப்பு போராட்டம்.. - separate district Sankarankoil

திருநெல்வேலி: சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி இன்று அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான போஸ்டர்

By

Published : Sep 17, 2019, 4:34 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 110 விதியின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார் . தற்போது இதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு மாவட்டத்தின் எல்லைகள் பிரிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் சங்கரன்கோவிலை மையமாக கொண்டு திருவேங்கடம் , சிவகிரி , புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடை அடைப்பு போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒருநாள் சங்கரன்கோவிலில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் , வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் சங்கரன்கோவிலில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details