நெல்லை மாவட்டம், அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சபரிமலை அய்யப்பன் கோயிலின் மூலஸ்தானமாக கருதப்படும் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கியும், சங்கிலியால் அடித்துக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குவதற்கு முன் இந்தியாவின் கடைசி முடிசூடிய ஜமீன்தாரரான முருகதாஸ் தீர்த்தபதியிடம் உத்தரவு வாங்கியபின் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். அப்போது ஜமீன் ராஜ உடையில் காட்சியளிப்பார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தாரர் இறந்துவிட்டார்.
அதிலிருந்து கரோனா காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டு, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் ஜமீன் மறைவிற்குப்பிறகு முதன்முதலாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.