தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முடிந்தளவு உதவிகளை செய்யுங்கள் - நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் - சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன்

பெருநிறுவனங்கள், உதவ மனமுள்ளவர்கள் அனைவரும் கரோனா காலத்தில், உதவி தேவைப்படுபவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

relief materials for hospital by private firm
relief materials for hospital by private firm

By

Published : Jun 7, 2021, 9:35 PM IST

திருநெல்வேலி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண மருத்துவ உபகரணங்களை தனியார் நிறுவனம் வழங்க முன்வந்தது.

அதில், முதல் தவணையாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு முடிந்தளவு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி

மேலும், பெருநிறுவனங்கள், உதவ மனமுள்ளவர்கள் அனைவரும் கரோனா காலத்தில், உதவி தேவைப்படுபவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details