விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 130 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலருக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது.
ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் இயந்திரம்
இராஜபாளையம் தமிழ்நாடு சைகை அணி -5 (என்.சி.சி) அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக இராஜபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் இயந்திரம் (கான்சன்ட்ரேட்டர்) வழங்கப்பட்டது.
இலவச ஆக்ஸிஜன் இயந்திரம்
இந்நிலையில், இராஜபாளையம் தமிழ்நாடு சைகை அணி -5 (என்.சி.சி) அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக உயிர்காக்கும் ஆக்ஸிஜன் இயந்திரம் (கான்சன்ட்ரேட்டர்) இராஜபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் இயந்திரத்தை என்.சி.சி. அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தலைமை மருத்துவர் பாபுஜிடம் வழங்கினர்.