நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வாகன காப்பீடு, போக்குவரத்து வாகனங்களின் வரிகளை உயர்த்தி மோட்டார் வாகன தொழிலை அழிக்கின்ற மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், உயர்த்திய வாகன வரியை திரும்பப் பெற வலியுறுத்தியும், மோட்டார் வாகன தொழிலை காப்பாற்ற கோரியும் நெல்லை மாவட்ட தொழிற்சங்கதினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வாகன சட்டம்; திரும்பப்பெற வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! - நெல்லை
நெல்லை: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மேலப்பாளையத்தில் எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
protest
இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டிது கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்தொடரும் எனவும், தோழமை தொழிற்சங்கங்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.