திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்திப் பேசியதாகக் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 24) மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டார். அவரை குழித்துறை நீதிமன்றத்தில் காவலர்கள் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைமத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.