தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் உதவி ஆய்வாளர் உயிரைப் பறித்த கரோனா! - திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police si dies of corona in thirunelveli
police si dies of corona in thirunelveli

By

Published : May 24, 2021, 8:42 PM IST

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் ஜான்சன். இவருக்கு தொற்று ஏற்பட்டு நெல்லை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் இன்று(மே 24) திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மாவட்டத்தில் ஏற்கெனவே பல காவலர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் நாள்தோறும் 600க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த சில தினங்களாக தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று மாவட்டம் முழுவதும் 280 பேர் கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பலர் சிகிச்சைப் பலனின்றி தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வேதனையளிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி மையத்தில் ஆன்லைன் பதிவு செய்ய அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details