தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் குழந்தை திருமணம்... பெற்றோர்களுக்கு வலைவீச்சு - Child marriage

திருநெல்வேலி அருகே 20 வயது இளைஞருக்கும், 16 வயது சிறுமிக்கும், குழந்தை திருமணம் செய்து வைத்த இரு தரப்பு பெற்றோர்களையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

By

Published : Aug 17, 2022, 1:51 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவிக்கும் அதே ஊரை சேர்ந்த 20 வயது இளைஞருக்கும் அவர்களின் பெற்றோர்கள் நேற்று (ஆக. 16) திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்தவர்கள் நெல்லை குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் பணங்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்க, இரு தரப்பு பெற்றோர்களையும் வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, அதே ஊரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை திருமணம் ஒன்று அரங்கேறி இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், பணகுடி பகுதியில் நடைபெற்ற குழந்தை திருமண சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், பணகுடி காவல் துறையினருக்கு தகவல் தெரிந்தும் நடவடிக்கைக்கு போதிய வேகம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கனல் கண்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தொண்டர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details