தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் பட்டப்பகலில் பெண் எரித்து கொலை? போலீசார் விசாரணை

நெல்லையில் பட்டப்பகலில் பெண் ஒருவரின் சடலத்தை எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை

By

Published : May 3, 2022, 9:53 PM IST

நெல்லை பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் ஆதாம் நகரில், நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் உள்ளன. இந்த நிலையில், அங்குள்ள பொதுமக்கள் அவற்றில், குப்பைகளைக் கொட்டுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளதால், அப்பகுதி குப்பை மேடாகக் காட்சியளித்து வருகிறது.

குப்பையில் பெண் சடலம்: இந்த நிலையில் இன்றைய தினம் (மே 03) மதிய வேளையில் அப்பகுதியில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் சடலம் ஒன்றை குப்பையில் வீசியுள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சடலத்தின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த துணி?:இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் ஒரு பெண்ணின் உடலை அந்தப்பகுதியில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் துணி ஒன்று இறுகக் கட்டியிருந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை:நெல்லை மாநகர தடயவியல் நிபுணர் குழுவினர், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரித்துச்சென்றுள்ளனர். மேலும், ஆதாம் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழுத்தில் துணி இறுகக் கட்டி எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இறந்த பெண் யார்? என்ன நடந்தது? இந்தச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பன உள்ளிட்ட பலகோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: #couplechallenge-ஐ புறக்கணிக்க வேண்டும்: தடயவியல் நிபுணர் கருத்து

ABOUT THE AUTHOR

...view details