திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக நேற்று (ஜூன் 29) ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று மாலை நிலவரப்படி 751 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழையூத்து காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று - காவல் நிலையம் மூடல்
திருநெல்வேலி : தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கும் தற்போது தொற்று வேகமாக பரவுகிறது. நேற்றுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர், உதவி ஆய்வாளர் ஒருவருக்கு தொற்று பரவியிருந்த நிலையில் இன்று (ஜூன் 30) மேலும் ஒரு காவல் ஆய்வாளருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக தாழையூத்து காவல் நிலையம் இன்று மூடப்பட்டது. அங்கு தடை செய்யப்பட்ட பகுதி என மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மேலும் காவல் நிலையத்தை சுற்றிலும் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். காவல் நிலைத்தில் பணிபுரியும் பிற காவலர்களுக்கும் தொற்று பரவியிருக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கும் பரிசோதனை செய்யவுள்ளனர். அங்கு பணியாற்றிய அனைத்து காவலர்களும் தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.