தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள் - எச்சரித்து அனுப்பிய காவல்துறை - திருநெல்வேலி மாவட்ட ஜெயந்தி விழா

இருசக்கர வாகனத்தில் கெத்து காட்டிய இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இளைஞர்களுக்கு புத்திமதி கூறிய காவல் துறை
இளைஞர்களுக்கு புத்திமதி கூறிய காவல் துறை

By

Published : Oct 30, 2021, 8:00 PM IST

திருநெல்வேலி:தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு பகுதியிலுள்ள முத்துராமலிங்கம் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி பல்வேறு அமைப்பின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் இன்று (அக்.30) காலை முதல் நெல்லை வண்ணாரப்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் கொடியுடன் வலம் வந்தனர்.

குறிப்பாக பலர் ஒரே வாகனத்தில் 3 பேர் 4 பேரை ஏற்றிக்கொண்டு அதிக ஒலி எழுப்பியவாறு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.

சாகசம் செய்த இளைஞர்கள்

இந்நிலையில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தனது காரில் சென்றபோது அவருக்கு முன்னால் சென்ற சில நபர்கள் வேண்டுமென்றே அதிக ஒலி எழுப்பியபடி வாகனத்தில் சாகசம் செய்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாளையங்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையில் காவல் துறையினர் வண்ணாரப்பேட்டை அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இளைஞர்களுக்கு புத்திமதி கூறிய காவல் துறை

தட்டிக் கேட்ட காவல் துறை

பின்னர், தேவர் ஜெயந்திக்குச் சென்ற வாகன ஓட்டிகளிடம் கிடுக்கிப்பிடி காட்டப்பட்டது. மேலும், அதிவேகத்தில் சென்ற இளைஞர்களை காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர்.

அப்போது, “தேவர் சிலை சந்திப்பு பகுதியில் இருக்கும்போது ஏன் தேவையில்லாமல் இந்த வழியாக வருகிறீர்கள்? ஊர்வலம் செல்வதற்கு முறையான அனுமதி உள்ளதா? என உதவி ஆய்வாளர் அருணாச்சலம் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, அமைதியான முறையில் சாலையில் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்து இளைஞர்களை அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி - முதலமைச்சர் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details