தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டாக்கத்தியுடன் பெட்ரோல் போட வந்த கும்பல் ஊழியரைத் தாக்கிய சிசிடிவி - மதுபானக் கடையில் தகராறு

பெட்ரோல் போட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பங்க் ஊழியரைத் தாக்கிய சிசிடிவி காட்சிகளின் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பல் அட்டகாசம்
கும்பல் அட்டகாசம்

By

Published : Jun 3, 2022, 5:01 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூர் மெயின்ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் நேற்று (ஜூன் 2) இரண்டு பைக்குகளில் வந்த 5 பேர் பெட்ரோல் போட்டனர். அப்போது, அவர்கள் மதுபாட்டில், பட்டாக்கத்தி வைத்து பங்க் ஊழியரை காலால் உதைத்தும் மிரட்டியும் உள்ளனர்.

ஆயுதங்களுடன் வந்து பங்க் ஊழியர்களிடம் ரகளை

இந்த காட்சி பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சேரன்மகாதேவி போலீசார் சேரன்மகாதேவியைச் சேர்ந்த சரவணன், பெருமாள், பத்தமடையை சேர்ந்த பிச்சையா, சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த மகராஜன் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட தகவலில் அதே கும்பல் ஆயுதங்களுடன் சேரன்மகாதேவியிலுள்ள தனியார் ஓட்டல், மதுபானக் கடையிலும் மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம்! இருவர் மீது துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details