தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளிலும் 5 சதவீத பணிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
கோரிக்கைக்காக போராடிய மாற்றுத்தினாளிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆட்சியர் அலுவலகம் எதிரே சங்க உபத்தலைவர் தியாகராஜன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:முக ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது - இன்பதுரை எம்எல்ஏ