தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அங்கன்வாடி குழந்தைகளுக்கு குவிந்த கல்விச் சீர்வரிசை...! - thirunalveli

திருநெல்வேலி: செங்கோட்டை அருகே பண்பொழி அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கல்விச் சீர்வரிசை செலுத்தியது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊர் பொதுமக்களின் கல்வி சீர் வரிசை

By

Published : Sep 10, 2019, 7:49 AM IST

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி அங்கன்வாடி உள்ளது. இங்கு அப்பகுதி குழந்தைகள் மழலைக் கல்வி கற்றுவருகின்றனர்.

இந்நிலையில், இந்த அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து கல்விச் சீர்வரிசை வழங்கினர். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், எழுதும் உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய சீர்வரிசைப் பொருட்கள் வழங்கினர்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊர் பொதுமக்களின் கல்விச் சீர்வரிசை

இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு நாங்களே பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசிடம் உதவியை நாடி காத்திருக்கும் நேரத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அங்கன்வாடியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details