திருநெல்வேலி: ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் மகராஜன் ஜவுளிக்கடை இயங்கிவருகிறது. இதன் உரிமையாளர் ராஜேந்திரன் (60) ஈரோடு, திருப்பூரில் மலிவாக வேட்டி, சட்டை உள்ளாடைகளை வாங்கிவந்து அதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து ஒட்டி விற்பனை செய்துள்ளார்.
இதற்காக ஆலங்குளத்தில் டைப்பிஸ்ட் செல்வகுமார் என்பவர் போலியான முத்திரைகளைத் தயாரித்துத் தந்துள்ளார். திருநெல்வேலி ஜங்ஷன், சி பிரிண்ட் நிறுவனத்திலும் போலியான முத்திரைகளைப் பிரிண்ட் செய்துள்ளனர். இது குறித்து பிரபல நிறுவன மேலாளர் பாபு அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.