திருநெல்வேலி: சாம்பாரில் தொடங்கி பொறியல், அவியல், ஆம்லேட், பிரியாணி என்று சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது. அதேசமயம் விவசாயிகள் இடையே வெங்காயம் உற்பத்தி என்பது அவ்வப்போது குறைவதும் அதன்காரணமாக விலை உயர்வதும் வழக்கம். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்திய அதிகளவு இருந்ததால், விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய் என்றும் சின்ன வெங்காயமும் 30 முதல் 40 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டுவந்தது.
இந்த நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை ஒரே நாளில் 50 முதல் 60 ரூபாய் வரை உயரந்துள்ளது. நேற்று(அக்.13) ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 40-க்கு விற்பனையான நிலையில் இன்று(அக்.14) ஒரு கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை விற்கிறது.