தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் பிள்ளைகளுக்கு உதவித்தொகை! - nellai sp honor students

திருநெல்வேலி: 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உதவித்தொகை வழங்கி கௌரவித்தார்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் குடும்ப மாணவர்களுக்கு பரிசு
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் குடும்ப மாணவர்களுக்கு பரிசு

By

Published : Aug 10, 2020, 7:31 PM IST

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அனைவரும் தேர்ச்சியாகினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினரின் பிள்ளைகள் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தால், காவல் அலுவவர்கள் அவர்களை அழைத்து பாராட்டி ஊக்கத்தொகையும் வழங்குவர்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் குடும்ப மாணவர்களுக்கு பரிசு

அந்த வகையில் இந்தாண்டும் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல் துறையினரின் பிள்ளைகளை நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் அழைத்து உதவித்தொகை வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க; 10ஆம் வகுப்பில் 5,248 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததற்கு காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details