தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் மருத்துவமனை காவலாளி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை - murder

பாளையங்கோட்டை: தனியார் மருத்துவமனை காவலாளி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனை காவலாளி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை!

By

Published : Jul 5, 2019, 1:31 PM IST

தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்கண்ணன் . இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சொந்த ஊரில் ஏற்பட்ட பிரச்னைகளாலும், மகளின் கல்லூரி படிப்புக்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் இருந்து பாளைங்கோட்டைக்கு குடி பெயர்ந்தார்.

வழக்கம்போல் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர், வீட்டில் இருந்து அரைகிலோ மீட்டர் தூரம் வந்த நிலையில், அங்கு காத்திருந்த மர்ம கும்பல் இவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் தடயவியல் நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட இடம்

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details