தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் கரோனா தடுப்பூசியால் தொழிலாளி உயிரிழந்து விட்டாரா? மாநகராட்சி ஆணையர் விளக்கம் - TIRUNELVELI CORPORATION COMMISIONER KANNAN

தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்கு நாளில் உயிரிழந்த தொழிலாளியின் மரணம் குறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் விளக்கமளித்துள்ளார்.

கரோனா தடுப்பூசியால் தொழிலாளி உயிரிழந்து விட்டாரா ,திருநெல்வேலி, முத்துகிருஷ்ணன்
nellai-corporation-commisioner-statement-about-labour-died-after-vaccine

By

Published : Apr 15, 2021, 6:17 PM IST

திருநெல்வேலி :திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் கருவேலன் குண்டு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(46). இவர் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்திவருவதால் முத்துகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்பேரில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.8) பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளது. ஊசி போட்ட பிறகு காய்ச்சல் போன்ற சின்ன தொந்தரவு இருக்கும் என்பதால் உடல்வலியை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். இந்தச் சூழலில் நேற்று முன்தினம் (ஏப்.13) திடீரென முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தடுப்பூசி போட்டு நான்கு தினங்களே ஆனதால், தடுப்பூசியால் தான் முத்துகிருஷ்ணன் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் பேசி வந்துள்ளனர்.

அதேசமயம் முத்துகிருஷ்ணனுக்கு வலிப்பு நோய் உள்பட பிற நோய் தொந்தரவு இருப்பதால் இறந்திருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி போட்டதால்தான் அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, உயிரிழந்த முத்து கிருஷ்ணனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, "தடுப்பூசியால் இறந்துவிட்டதாக எங்களுக்கு இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இருப்பினும் தகவல் வந்தவுடன் அலுவலர்களை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். நெல்லையில் தடுப்பூசியால் யாரும் இறக்கவில்லை" என்று தெரிவித்தார்.

தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் திருநெல்வேலியில் தடுப்பூசி போட்டதால் தொழிலாளி உயிரிழந்துவிட்டதாக பரப்பப்பட்ட தவறான தகவல் அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பாதாள சாக்கடையில் விழுந்த நபர்: வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details