திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று (ஜூலை 26) மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கூலித்தொழிலாளியான தனது தந்தை, தனக்கு கல்லூரிக்கட்டணம் செலுத்த சிரமப்பட்டதைப்பார்த்து மனமுடைந்து மாணவி தற்கொலை செய்ததாகத்தகவல் வெளியானது.
இந்நிலையில், மாணவி எழுதி வைத்த தற்கொலைக்கடிதத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், "எனக்காக மத்தவங்க கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியல... எனக்கு காலேஜ் பீஸ் கட்டறதுக்கு அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க... இப்ப கூட பீஸ் கட்டத்தான் போய்ருக்காங்க... மத்தவங்கல கஷ்டப்படுத்த கூடாதுன்னுதான் இந்த முடிவு... என் சாவுல மர்மம் இருக்க கூடாதுன்னுதான் இந்த லெட்டர், வேறு எதுவும் காரணம் இல்லை... " என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.