தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்லூரி மாணவியை கல்யாணம் செய்வதாக ஏமாற்றிய மதகுரு கைது! - கிறிஸ்துவ மதகுரு கைதான சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நெல்லையில் கல்லூரி மாணவியைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய கிறிஸ்தவ மத குருவை காவல்துறை கைது செய்தனர்.

பாதிரியார் கைது
பாதிரியார் கைது

By

Published : Jul 28, 2022, 8:36 PM IST

நெல்லை: பாளையங்கோட்டை ஆயுதப்படை அருகே கோரிப்பள்ளம் அன்பகத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ்(26). இவர் பி.எஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பி.டி படித்துள்ளார்.

பின்னர் அவர் நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் கீழுள்ள கே.டி.சி நகர் கிறிஸ்டியா நகர் ஆலயத்தில் பயிற்சி மதகுருவாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், 18 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் இவர் குழந்தைப்பருவம் முதல் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால் மில்டன் மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறியதைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து, அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோருக்குத்தெரியாமல் மில்டன் கனகராஜ் மாணவிக்கு செல்போன் ஒன்று வாங்கிக்கொடுத்துள்ளார். இதனிடையே மில்டனின் பெற்றோர் அவருக்குத்திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். இதனை அறிந்த மாணவி மில்டனிடம் வேறு பெண்ணைத்திருமணம் செய்வது குறித்துக்கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மில்டன் மாணவி மற்றும் அவரது பெற்றோரை அவதூறாகப்பேசி குடும்பத்துடன் எரித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதகுரு மில்டன் கனகராஜை நேற்று (ஜூலை27) கைது செய்தனர். இவ்வாறு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய கிறிஸ்தவ மதகுரு கைதான சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியை கல்யாணம் செய்வதாக ஏமாற்றிய மதகுரு கைது!

இதையும் படிங்க: காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தர்ணா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details