தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டி - பரபரப்பு

ஓ. பன்னீர்செல்வத்தை ஆலோசிக்காமல் முடிவெடுத்ததால் தான் தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும், இதேநிலை நீடித்தால் தலைமைக்கழகத்தை முற்றுகையிடுவோம் என நெல்லையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நெல்லையில் இபிஎஸ்சுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரால் பரபரப்பு
நெல்லையில் இபிஎஸ்சுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரால் பரபரப்பு

By

Published : Jun 9, 2021, 12:16 PM IST

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை மற்றும் நெல்லை சந்திப்பு ஆகிய பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், "அதிமுக கட்சி செயல்பாடுகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே, அவ்வாறு செய்ததால் தான் சட்டப்பேரவைத்ம தேர்தலில் தோல்வி அடைந்தோம். இது தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் " என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலின் போது நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details