தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாங்குநேரியில் காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - கே.பி. முனுசாமி - நாங்குநேரி தொகுதியில் அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்

திருநெல்வேலி: நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Congress Party Memebers Joining To AIADMK

By

Published : Oct 8, 2019, 10:26 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் லெக்கன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி நாங்குநேரி தொகுதியில் அதிமுக ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும்; காங்கிரஸ், திமுகவினர் தொடர்ந்து பணம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டி வருவது தேர்தல் வருவதற்கு முன்பே அவர்களுக்குத் தோல்வி பயம் வந்து விட்டது என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details