நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி அக்டோபர் 21ஆம் தேதியன்று அத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மொத்தம் 66.35 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
299 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல் துறையினரின் பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்த அறை முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.