தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - நாங்குநேரி அதிமுக வேட்பாளர் - admk candidate voted in Reddiarpatti booth

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

anguneri-by-election-admk-candidate

By

Published : Oct 21, 2019, 2:29 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், தனது சொந்த ஊரான ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''காங்கிரஸ் வேட்பாளார் ரூபி மனோகரன் சென்னையைச் சேர்ந்தவர். ஆனால் நான் இந்த தொகுதிக்காரன்; எனது தொகுதி மக்களுக்கு என்ன பிரச்னை என்பது எனக்குதான் தெரியும். மக்கள் தற்போது எழுச்சியோடும், புத்துணர்ச்சியோடும் வந்து வாக்குச் செலுத்துகிறார்கள்.

அதிமுக வேட்பாளர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பு

அதிமுக அரசு தற்போது நல்ல முறையில் மக்களுக்கு பணிகள் செய்து கொண்டு இருக்கிறது. அதனால் மக்கள் அதிமுக அரசை ஆதரித்து வருகிறார்கள். நாங்கள் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளி 2019 - சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நிலையும் பட்டாசு விற்பனையும்!

ABOUT THE AUTHOR

...view details